உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடு பொருட்களுக்கான பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனையில் செலுத்தலாம்

இடு பொருட்களுக்கான பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனையில் செலுத்தலாம்

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா வெளியிட்டுள்ள அறிக்கை: பவானிசாகர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை நெல், உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை, உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட், டிரைக்கோ டர்மா விரிடி, சூடோமோனாஸ், மெட்டா ரைசியம் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு வரை விவசாயிகள் வாங்கும் இடுபொருட்களுக்கு ரொக்கமாக பணம் செலுத்தும் முறையே இருந்து வந்தது.தற்சமயம் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, விவசாயிகள் வாங்கும் இடுபொருட்களுக்கு டிஜிட்டல் முறையிலான ஏ.டி.எம்., டெபிட், கிரிடிட் கார்டு, கூகுள் பே போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்தலாம். இதற்கான அனைத்து வசதிகளும், பவானிசாகர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை