மேலும் செய்திகள்
ஆட்டோவில் இருந்து கணவன் தள்ளிவிட்டதில் மனைவி பலி
14-Oct-2026
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழியாக தினமும், ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன. இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஓவர் லோடு ஏற்றி வரும் வாகனங்களால், மலைப்பாதையில் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பது தொடர் கதையாக உள்ளது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து, இதுபோன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது கிளைக்கதையாக உள்ளது. அந்த வகையில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போக்குவரத்து அலுவலர்கள், பண்ணாரி சோதனைச்சாவடியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் அதிக பாரம் ஏற்றி வந்த ஆறு வாகனங்களுக்கு, 1.38 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
14-Oct-2026