ரயில் பயணத்தில் சலுகை ஓய்வூதியர் வலியுறுத்தல்
ஈரோடு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தபால் துறை ஓய்வூதியர் சங்க கோட்ட செயலர் ராமசாமி உட்பட பலர் பேசினர்.ஊதியக்குழு பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுக்குழு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் ஊதியக்குழு பலன்கள் அனைத்தையும் மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். ரயில், விமானங்களில் மூத்த முடிமக்களுக்கான பயண கட்டண சலுகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஹரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.