மேலும் செய்திகள்
முதுநகரில் ரயில்வே கேட் உடைந்து சேதம்
01-Dec-2024
ஈரோடு: கருவியல்பாறைவலசில், குழாய் உடைந்ததையடுத்து, கடந்த இரு நாட்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாநகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட கருவியல்பாறை வலசில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, கொத்துக்காரன் புதுார் திட்டம் ( பழைய திட்டம்) மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கருவியல்பாறை வலசில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. அது, அப்பகுதியில் இருக்கும் சிறுபாலத்தின் அடியில் செல்வதால், அதனை கண்டுபிடிக்க முடியாமல், மாநகராட்சி ஊழியர்கள் இரு நாட்களாக திணறி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை உடைப்பு ஏற்பட்ட இடத்தை கண்டறிந்த ஊழியர்கள், குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
01-Dec-2024