மேலும் செய்திகள்
'கத்தி' போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்
16-Jan-2025
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், பிரசித்தி பெற்ற சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பொங்கல் விழா மூன்று நாட்கள் விமர்சையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா கடந்த, 13ல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில், வீரகுமாரர்கள் வெற்றுடம்பில் கத்தி போட்டபடி ஊர்வலமாக வந்தனர். நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலம், அலங்கார பூஜையை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், சவுடேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக, நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. சப்பரத்தில் எழுந்தருளிய சவுடேஸ்வரி அம்மன், முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தார். வழி நெடுகிலும் காத்திருந்த மக்கள், சவுடேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
16-Jan-2025