மேலும் செய்திகள்
நல்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்
30-Jun-2025
ஈரோடு:ஈரோடு, முத்தம்பாளையம் அடுத்த பண்ணைக்காடு என்ற இடத்தில், 45 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அங்குள்ள போர்வெல் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. போர்வெல் நேற்று காலை பழுதானதால் குடிநீர் கிடைக்கவில்லை. புகாரின்படி சென்ற மாநகராட்சி அதிகாரிகள், போரை பழுது நீக்கம் செய்து மீண்டும் தண்ணீர் வினியோகிக்க இரு நாட்களாகும் என்று தெரிவித்தனர். இதனால், 15க்கும் மேற்பட்டோர் முத்தம்பாளையம் செல்லும் சாலையில் நேற்றிரவு, 8:00 மணிக்கு tசாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார், மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தனர். போர்வெல் சரி செய்யும் வரை, லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதி கூறியதால், 15 நிமிடத்தில் மறியலை கைவிட்டனர்.
30-Jun-2025