உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரசாயன கழிவை கொட்ட வந்த டேங்கர் லாரி சேற்றில் சிக்கியதால் மக்கள் சிறைபிடிப்பு

ரசாயன கழிவை கொட்ட வந்த டேங்கர் லாரி சேற்றில் சிக்கியதால் மக்கள் சிறைபிடிப்பு

ஈரோடு: ஈரோடு, சூளை பகுதி யில் மல்லிகை நகர், அருள் வேலவன் நகர், பாரதி நகர் பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். பாரதி நகர் பகுதியில் காலியிடத்தில் கடந்த சில மாதங்களாக ரசாயன திரவ கழிவை, மர்ம நபர்கள் கொட்டி செல்வதால், மக்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வந்-தனர். நிலத்தடி நீரும் மாசடைந்து வந்தது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகாரும் அளித்தி-ருந்தனர்.இந்நிலையில் பாரதி நகர் பகுதி ஓடை புறம்போக்கு நிலத்தில் கொட்ட, ரசாயன கழிவுகளை ஏற்றிய டேங்கர் லாரி நேற்று அதி-காலை, 5:00 மணியளவில் வந்தது. அப்போது சேற்றில் சிக்கி-யதால் நகர முடியாமல் நின்றது. இதைப்பார்த்த மக்கள் லாரியை சிறைபிடித்தனர். தகவலறிந்து வி.ஏ.ஓ., ஜான், மாசு கட்டுப்-பாட்டு வாரிய அலுவலர்கள், வீரப்பன்சத்திரம் போலீசார் வந்-தனர். லாரி டிரைவர், உரிமையாளர், கழிவு நீரை கொட்ட செய்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்-தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர். லாரியை ஓட்டி வந்-தது கடலுார், சுட்டுகுளம், கஞ்சமலை வீதியை சேர்ந்த கணபதி, 44, என்பது தெரியவந்தது. விசாரணையில் கோவை, கருமத்தம்-பட்டியில் உள்ள துணி ஆலையில் இருந்து மறு சுழற்சிக்காக விழுப்புரம் கொண்டு செல்வதாக ரசீது தயார் செய்து, இங்கு கொட்ட வந்தது தெரியவந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அலு-வலர்கள், லாரியை அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்-டனர். எத்தனை மாதங்களாக ரசாயன கழிவை இப்படி பொது இடங்களில் கொட்டப்பட்டது? எந்தெந்த நிறுவனங்கள் ரசாயன கழிவை கொட்டுகிறது என்றும் விசாரிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை