உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாதாள சாக்கடை குழாய் மாற்றும் பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு

பாதாள சாக்கடை குழாய் மாற்றும் பணி விரைந்து முடிக்க மக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 57வது வார்டு மூலப்பாளையம் அருகில் உள்ள எல்.ஐ.சி., நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இங்கு பாதாள சாக்கடை குழாய் சேதமாகி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலைகளில் வெளியேறியது. மக்கள் புகாரால் சேதமான குழாய்களை அகற்றிவிட்டு, புதிதாக பைபர் குழாய் அமை க்கும் பணி, ஐந்து நாட்களுக்கு முன் தொடங்கியது. சாலை நடுவில் குழி தோண்டப்பட்டு இருபுறமும் மண்ணை குவித்து பணி நடக்கிறது.இதனால் குடியிருப்புவாசிகள் அன்றாட பணிகளுக்காக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பணிகளை மேயர் நாகரத்தினம் நேற்று ஆய்வு செய்தார். விரைவாக பணியை முடித்து குழிகள் மூடப்படும் என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை