உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.கே.புதுார் மக்கள் குடிநீர் கேட்டு மறியல்

பி.கே.புதுார் மக்கள் குடிநீர் கேட்டு மறியல்

பவானி, அம்மாபேட்டை யூனியன் பி.கே.புதுார் பஞ்., மேல்காடு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரண்டு வாரமாக குடிநீர் வரவில்லை. பஞ்., நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பி.கே.புதுார் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியதால், கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி