தார்ச்சாலை வசதி கேட்டு மனு தந்து மக்கள் எச்சரிக்கை
ஈரோடு: நம்பியூர் தாலுகா குருமந்துார், கரட்டுப்பாளையம் ஊராட்சி மக்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூணாம்பள்ளியில் இருந்து மேட்டுக்காடு மற்றும் சுட்டிகல்மேடு, கடத்துார் செல்லும் சாலையை மாணவர்கள், விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். சிலர் சாலையை விரிவுபடுத்த விடாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதை அகற்றி விரிவாக்கம் செய்து தர வேண்டும். ஏற்கனவே இச்சாலை தரம் உயர்த்தப்பட்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மனு கொடுத்து, 15 நாட்களில் தீர்வு கிடைக்காவிடில் சாலை மறியல் அல்லது நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.