உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மக்களை தேடி மருத்துவ திட்டம் 4 ஆண்டில் 7.49 லட்சம் பேர் பயன்

மக்களை தேடி மருத்துவ திட்டம் 4 ஆண்டில் 7.49 லட்சம் பேர் பயன்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் கடந்த, நான்கு ஆண்டுகளில், 7.49 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.மக்களை தேடி மருத்துவம் திட்டம், 2021 ஆக., 5ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பிசியோதெரபி, டயாலிசிஸ் உட்பட தொற்றா நோய்களுக்காக வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை வழங்குவது, மருந்துகளை வழங்குவது நோக்கம். இத்திட்டத்தின், 50வது லட்சமாவது பயனாளிக்கு சிட்லபாக்கத்திலும், 1 கோடியாவது பயனாளிக்கு திருச்சி மாவட்டத்திலும், கடந்த, 2024 டிச.,ல் ஈரோடு மாவட்டம் சுந்தராம்பாளைம் என்ற பெண்ணுக்கு, 2 கோடியாவது பயனாளி என்ற அடிப்படையில் முதல்வரே மருந்து பெட்டகத்தை வழங்கினார்.ஈரோடு மாவட்டத்தில், 2021-22ல், 66,728 பயனாளிகள், 2022-23ல், 1 லட்சத்து, 1,272 பயனாளிகள், 2023-24ல், 3 லட்சத்து, 21,025 பயனாளிகள், நடப்பாண்டு கடந்த மார்ச் வரை, 2 லட்சத்து, 58,224 பயனாளிகள் என, நான்கு ஆண்டுகளில், 7 லட்சத்து, 49,249 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை