மேலும் செய்திகள்
4 பேரூராட்சிகளில் நவீன எரிவாயு தகன மேடை வசதி
01-May-2025
ஈரோடு:கோபி தாலுகா கொளப்பலுார், நஞ்சப்பா காலனி, ஜெ.ஜெ.நகர், சாணார்பாளையம், சாணார்பாளையம் காலனி பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்களது பகுதி மக்களுக்கு ஏற்கனவே சுடுகாடு பயன்பாட்டில் உள்ளது. அப்பகுதி மக்களுக்குள் எவ்வித பிரச்னையும் எழவில்லை. இந்நிலையில் கொளப்பலுார் டவுன் பஞ்., சார்பில் எங்களது ஊரில், 1.90 கோடி ரூபாயில் எரிவாயு தகன மேடை அமைக்க, பள்ளவாரி குட்டையை தேர்வு செய்துள்ளனர். கோபியில் இரு இடங்களில் மின் மயானம், எரிவாயு தகன மேடை உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு இத்திட்டம் தேவையில்லை. இவ்வாறு கூறினர்.
01-May-2025