உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணத்துக்காக கடத்தல் நடவடிக்கை கோரி மனு

பணத்துக்காக கடத்தல் நடவடிக்கை கோரி மனு

ஈரோடு, திருப்பூர் மாவட்டம் தண்டுக்காரன்பாளையம், அவனாயிபுதுார் அருள்குமார், 32; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து, திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த, 2024ல் ஒட்டன்சத்திரத்தில் மசாஜ் பார்லர் வைக்க, கரூர் வீரக்குமார் என்பவரிடம், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். இதற்காக, 2 பிராமிசரி நோட்டு, வங்கி காசோலை வழங்கினேன். அரசின் அனுமதி கிடைக்காததால் அதை மூடிவிட்டு, பெருந்துறை சிப்காட்டில் ஒருவருக்கு, கார் டிரைவராக பணி செய்கிறேன். கடந்த, 3ம் தேதி எனக்கு கடன் தந்த வீரக்குமார் உட்பட சிலர் காரில் வந்து, வட்டி, கடன் தொகை வழங்கியதுபோக கூடுதலாக, மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டினர். தொடர்ந்து எனது மற்றும் மனைவியின் பெற்றோரை மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை