தே.பா., சட்டத்தில் சீமானை கைது செய்யக்கோரி மனு
ஈரோடு: மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் தலைமையில், ஈரோடு, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடலுாரில் ஈ.வெ.ரா.,வை பற்றி அவதுாறாக பேசி உள்ளார். இதனால் அசா-தாரண சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தவிர, அவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்-களில் இப்பிரச்னை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோட்டில் கடந்த முறை நடந்த இடைத்தேர்தலின்போது அருந்ததியர் சமூக மக்களை இழிவாக பேசியது தொடர்பாக, கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனவே சீமானை கைது செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.