மக்களை தேடி மருத்துவ ஊழியர் ஊதியம் உயர்த்த மனு
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 'மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம்' சார்பில் மாவட்ட செயலர் தனலட்சுமி, தலைவர் ரேவதி முன்னிலையில், மனு வழங்கி கூறியதாவது:தமிழகத்தில், 'மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள்', 11,000 பேர் மாதம், 5,500 ரூபாய் ஊதியத்தில் பணி செய்கிறோம். ஈரோடு மாவட்டத்தில், 300 பேர் பணியில் உள்ளோம். மாத ஊதியம், 10,000 ரூபாயாக உயர்த்தி, ஒவ்வொரு மாத மும், 5ம் தேதிக்குள் வழங்க வேண் டும். 'ஸ்கோர் சீட் மார்க்' என்ற பெயரில் ஊதிய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். 2 மணி நேர வேலை என பணியமர்த்தி, 8 மணி நேரத்துக்கு மேலா கவும், பண்டிகை, வார விடுமுறை இன்றி வேலை வாங்குவதை முறைப்படுத்த வேண்டும். எங்களை பணி வரண்முறை செய்து, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர்.