வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனு
வெள்ளாளபாளையம் மக்கள்கோபி சப்-கலெக்டரிடம் மனுகோபி, :கோபி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளாளபாளையம் கிராம மக்கள், கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்திடம் நேற்று மனு கொடுத்தனர். மனுவில் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் விவசாயிகள் அதிகளவில் வசிக்கின்றனர். தவிர, கூலி தொழிலாளர்கள் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். நகராட்சியோடு இணைத்தால் கிராமப்புற சலுகைகள் ரத்தாகும். வரியினங்களும் உயரும். எனவே பஞ்சாயத்தை, கோபி நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.