உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை சீரமைப்பு கோரி மறியல்

சாலை சீரமைப்பு கோரி மறியல்

பவானிசாகர்: பவானிசாகர் அருகே சத்தி- கொத்தமங்கலம் சாலையில், டி.என்.ஆர்.நகர் பிரிவிலிருந்து, உப்புபள்ளம் வழியாக பிஞ்சமேடு மற்றும் கஸ்துாரி நகர் வரை, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான, 4 கி.மீ., தார்ச்சாலை உள்ளது. சாலை அமைத்து பல ஆண்டுகளாகி விட்டதால் குண்டு, குழி ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கில்லாத நிலையில் உள்ளது.சாலையை சீரமைத்து தரக்கோரி, 200க்கும் மேற்பட்ட மக்கள் டி.என்.ஆர்., நகர் பிரிவு அருகே நேற்று காலை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் பி.டி.ஓ., சிவசங்கர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மக்கள் மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை