உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்கப் வேன்

பர்கூர் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்கப் வேன்

அந்தியூர் பர்கூர் மலைப்பாதையில், பிக்கப் வேன் கவிழ்ந்து இருவர் காயமடைந்தனர்.கர்நாடக மாநிலம், மைசூருவிலிருந்து மூன்று சின்டெக்ஸ் தொட்டியில், மீன் குஞ்சுகளை ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூருக்கு பிக்கப் வேன் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், தைக்கல் தெருவை சேர்ந்த அசாருதீன், 25, என்பவர் வேனை ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த வேன் உரிமையாளர் அரவிந்த்தும், 31, உடன் வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணிக்கு, வரட்டுப்பள்ளம் அணை 'வியூ' பாயின்ட் வளைவில் திரும்பியபோது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில், இருவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் உதவியுடன், அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து, பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை