மேலும் செய்திகள்
குட்கா கடத்திய 2 பேர் கைது
13-Nov-2024
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கோயமுத்துாருக்கு, தக்காளி லோடு ஏற்றிய ஒரு பிக்-அப் வாகனம் புறப்பட்டது. ஆசனுாரை கடந்து திம்பம் மலைப்பாதையில் நேற்று மாலை வந்தது. ௧௧வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இதனால் மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. சமீபமாக தக்காளி ஏற்றிய பிக்-அப் வேன்கள், மலைப்பாதையில் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. அதிவேகமே இதற்கு காரணம் என்றும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-Nov-2024