உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுற்றுலா முக்கியத்துவம் கொண்டு இடங்களை காக்க வேண்டும்

சுற்றுலா முக்கியத்துவம் கொண்டு இடங்களை காக்க வேண்டும்

ஈரோடு:சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி, தலைமை வகித்து பேசியதாவது:ஒரு நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், கலாசார சூழல் ஆகிய அனைத்திலும், சுற்றுலா தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, 6 உலக பாரம்பரிய சின்னங்களோடு, 42,000க்கும் மேற்பட்ட கோவில், நீண்ட கடற்கரை, உயரிய மலைவாழிடங்கள், பசுமையான கிராமங்கள், பல்லுயிர் பாரம்பரிய தலங்களை கொண்டுள்ளன. இதனால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில், இரண்டாமிடத்திலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில், ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது. அனைத்து நிலைகளிலும் சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இடங்களை காக்க வேண்டும். இவ்வாறு பேசினார். 'சுற்றுலா மற்றும் நிலையான உருமாற்றம்' என்ற தலைப்பில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை