எதிர்ப்பு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய திட்டம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 141 டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதில் பல்வேறு கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் உள்ள கடைகளை இடம்மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணி நடப்பதாக தெரிகிறது.இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை வேறிடத்துக்கு மாற்ற அரசு உத்தேசித்துள்ளது. இதற்காக டாஸ்மாக் கடைகளின் அமைவிடம் குறித்த வரைபடத்தை, சென்னை டாஸ்மாக் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகளை ஆள் நடமாட்டம் குறைவான பகுதிக்கு மாற்றப்படும். இதன்படி மாவட்டத்தில், 15 கடைகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.