மேலும் செய்திகள்
திறன் அடிப்படையில் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
18-Jun-2026
ஈரோடு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பிளாஸ்டிக் செயலாக்க இயந்திர இயக்குபவர் (மெஷின் ஆப்ரேட்டர் பிளாஸ்டிக்ஸ் பிராசசிங் கோர்ஸ்) பயிற்சி வழங்க உள்ளது.ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டோர் பயிற்சியில் சேரலாம். சென்னை மாவட்டத்தில், 4 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படும்.பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம், வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். மாத ஊதியம், 18,000 முதல், 22,000 ரூபாய்க்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும். விருப்பம் உள்ளோம், தாட்கோ இணைய தளமான, www.tahdco.com முகவரியில் பதிவு செய்யலாம். ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாவது தளத்தில் உள்ள மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.
18-Jun-2026