உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 விடைத்தாள்திருத்தும் பணி நிறைவு

பிளஸ் 2 விடைத்தாள்திருத்தும் பணி நிறைவு

ஈரோடு:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச், 3ல் துவங்கி, 25ல் நிறைவடைந்தது. பிளஸ் 1 தேர்வு மார்ச், 5ல் துவங்கி, 27ல் நிறைவடைந்தது.இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக, 22,923 பேர், பிளஸ் 1ல், 24,289 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்து, இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த, பாதுகாப்பு மையத்துக்கு விடைத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன், வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு, பிற மாவட்ட விடைத்தாள், ஈரோடு மாவட்டத்துக்கு வந்தது.ஈரோடு மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்களாக ஈரோடுயு.ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் பி.வி.பி., பள்ளி, கோபி சாரதா மெட்ரிக் பள்ளி என, 3 பள்ளிகளில் அமைக்கப்பட்டது. கடந்த, 2ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. 1 லட்சத்து, 36,526 விடைத்தாள் திருத்தப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.தற்போது பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, வரும் திங்கள் அன்று துவங்குகிறது. இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஈரோடு வேளாளர் மகளிர் பள்ளி, கோபி வைரவிழா பள்ளியில் உள்ள மையங்களில் நடக்க உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை