உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 துணைத்தேர்வு வினாத்தாள்கள் வருகை

பிளஸ் 2 துணைத்தேர்வு வினாத்தாள்கள் வருகை

ஈரோடு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு வரும், 25 முதல் ஜூலை, 2 வரை நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 1,497 பேர் எழுத வின்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக், பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி, சத்தி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி என நான்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. துணை தேர்வுக்கான வினாத்தாள், ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டு காப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்து 'சீல்' வைத்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, 'சிசிடிவி' கண்காணிப்பும் ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ