மேலும் செய்திகள்
ஹிந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
21-Nov-2024
ஈரோடு, நவ. 27-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்ததை கண்டித்து, ஈரோடு மத்திய மாவட்ட பா.ம.க.,வினர், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மத்திய மாவட்ட தலைவர் பிரபு தலைமையில், மாநில துணை தலைவர்கள் பரமசிவம், வெங்கடாசலம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் குமார், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி உள்பட, 29 பேர் வந்திருந்தனர். இரண்டு நிமிடங்கள் மட்டும் கோஷமிட அனுமதிக்க வேண்டும் என போலீசிடம் கெஞ்சி ஆர்ப்பாட்டம் துவங்கினர். இதையடுத்து அனைவரையும் கைது செய்து, தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். 29 பேர் மீதும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.* பவானி அந்தியூர் பிரிவில், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நிர்வாகிகள் செங்கோட்டையன், முருகானந்தம், திருமுருகன் உள்பட, 3௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பவானி போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் முன், 50க்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர், மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். * சத்தியமங்கலத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், 14 பேர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனைவரையும் சத்தி போலீசார் தடுத்து கைது செய்தனர்.* சத்தியமங்கலத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், 14 பேர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அனைவரையும் சத்தி போலீசார் தடுத்து கைது செய்தனர்.
21-Nov-2024