உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வலைதளத்தில் பழகி சிறுமியுடன் திருமணம் தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ

வலைதளத்தில் பழகி சிறுமியுடன் திருமணம் தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ

ஈரோடு, ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்த, தர்மபுரி தொழிலாளி மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். தர்மபுரி பெனஹள்ளியை சேர்ந்த குமார் மகன் லட்சுமணன், 21, கூலி தொழிலாளி. சமூக வலைதளம் மூலம் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். இருவரிடையே பழக்கம் நெருக்கமான நிலையில், ஒரு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டது குறித்து, குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் கிடைத்தது. அவர்களது புகார் அடிப்படையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், லட்சுமணன் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ