முதியவர் உள்பட மூவர் மீது போக்சோ
முதியவர் உள்பட மூவர் மீது 'போக்சோ' ஈரோடு, அக். 11-ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; இவர், வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, விசாரணை நடத்திய ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.* பவானி, திருவள்ளூவர் நகர், வர்ணபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி, 21; இவர் ஈரோட்டை சேர்ந்த, 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில், தட்சிணாமூர்த்தி மீது வழக்குப்பதிந்தனர்.* பெருந்துறை சேனடோரியத்தை சேர்ந்த தொழிலாளி தினேஷ், 22, 16 வயது சிறுமியை திருமணம் செய்த புகாரில், கோபி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.