மேலும் செய்திகள்
லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது
10-Feb-2025
ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி, கைகாட்டி வலசு வேலப்ப கவுண்டன் வலசை சேர்ந்த கவின் மனைவி சங்கீதா, 29; ஈரோடு ஆயுதப்படை காவலர். தற்போது தனிப்பிரிவு குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து ஈரோடு நோக்கி ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். கைகாட்டி வலசு மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, கவனக்குறைவாக, அதிவேகமாக யமஹா பைக்கில் வந்த கைகாட்டி வலசை சேர்ந்த விக்னேஷ், 20, மோதினார். இதில் ஸ்கூட்டருடன் விழுந்த சங்கீதாவை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது. வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10-Feb-2025