உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராஜஸ்தான் தொழிலாளருக்கு போலீசார் அறிவுறுத்தல்

ராஜஸ்தான் தொழிலாளருக்கு போலீசார் அறிவுறுத்தல்

ஈரோடு, மஈரோடு, வெண்டிபாளையம் மாணிக்கவாசகர் காலனியில் உள்ள காலி இடத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, 120க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடிகாரம், பாசி, பெண்கள் பயன்பாட்டு பொருட்களை விற்பனை செய்து, வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்குள்ள கர்ப்பிணி ஒருவர், நகர்புற ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத பிரச்னையால், அவர்களை வெளியேறும்படி மாநகராட்சி நிர்வாகம் கூறியது.இதனால் அச்சமடைந்த ராஜஸ்தான் மாநிலத்தவர்கள், மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) தனலட்சுமியை சந்தித்து மனு வழங்கினர்.இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து முறையிட்டனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் இல்லாததால், திங்கள் அன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு வழங்கி முறையிட போலீசார் யோசனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை