உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராஜாங்கம் செய்த அயல்பணி போலீசார் அவரவர் ஸ்டேஷனுக்கு செல்ல உத்தரவு

ராஜாங்கம் செய்த அயல்பணி போலீசார் அவரவர் ஸ்டேஷனுக்கு செல்ல உத்தரவு

காங்கேயம், நவ. 22-காங்கேயம் போலீஸ் சப்-டிவிஷனில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி என நான்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன், ஒரு மகளிர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்டேஷன் உள்ளது. இவற்றில் ஆறு இன்ஸ்பெக்டர்கள், 22 எஸ்.ஐ.,க்கள், 200க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.இதில் அயல் பணி என்ற பெயரில், 20க்கும் மேற்பட்ட போலீசார், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஸ்டேஷனில் இருந்து கொண்டு, தனி ராஜாங்கம் நடத்துவதாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்ச்சியான புகார்கள் சென்றன. இதுகுறித்து டி.எஸ்.பி., விசாரணையில் ஈடுபட்ட நிலையில், காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில், 20க்கும் மேற்பட்ட போலீசார், அரசு உத்தரவுக்கு மாறாக, ஒரே இடத்தில் அயல் பணி பெயரில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் நாளை (இன்று)க்குள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டும். மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாமூலில் திளைத்து வாழும் பலர், அரசியல்வாதிகளை நாடி வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை