என்.ஹெச்.,களில் விபத்தை தவிர்க்கணும் ரோந்தில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவு
'என்.ஹெச்.,களில் விபத்தை தவிர்க்கணும்' ரோந்தில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவுஈரோடு, அக். 11-தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அதிகரித்து வரும் நிலையில், ஆயுதபூஜை விடுமுறையால் இதை தவிர்க்க, ஈரோடு மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்படி இன்று அதிகாலை, 4:00 மணி முதல், 11:00 மணி; இரவு, 9:00 மணி முதல் 12:00 மணி வரை தேசிய நெடுஞ்சாலையோரங்களில், வாகனங்கள் நிற்காமல் இருப்பதை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் போலீசார் உறுதி செய்ய வேண்டும். விபத்து ஏற்பட்டால் ஸ்டேஷன் அதிகாரிகளே பொறுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விபத்த தவிர்க்கவும், கண்காணிக்கவும், போலீசார் நெடுஞ்சாலைகளில் ரோந்து சுற்றி வர வேண்டும். வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால், உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு தொடரும். போலீஸ் ஹைவே பெட்ரோல் வாகனமும், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யும் என்று, போலீசார் தெரிவித்துள்ளனர்.