உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தப்பிய கைதியை 25 நாட்களாகியும் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

தப்பிய கைதியை 25 நாட்களாகியும் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

ஈரோடு: பெங்களூரை சேர்ந்தவர் ரூபி கான், 35; ஈரோட்டில் பல்வேறு இடங்களில் மொபைல்போன் டவரில் ஒயர்களை திருடிய வழக்கில், வெள்ளோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த, 25ம் தேதி இரவு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வெள்ளோடு போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். பிறகு ஈரோடு விரைவு நீதிமன்றம்-1ல் ஆஜர்படுத்தி, பெருந்துறை கிளை சிறையில் ஒப்படைக்க அழைத்து சென்றனர். செல்லும் வழியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது ரூபிகான் தப்பி ஓடி விட்டார். 25 நாட்களாகியும் ரூபிகானை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பெங்களூரில் ரூபிகான் பதுங்கி இருக்க கூடும் என கருதப்படுகிறது. இதனால் பெருந்துறை சப்-டிவிசன் எஸ்.ஐ.,க்கள் இருவர் பெங்களூரில் முகாமிட்டு உள்ளனர். ரூபிகான், அவரது தாய், உறவினர்கள், நண்பர்களின் மொபைல் போன் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. மொபைல்போனை ரூபிகான் முற்றிலும் தவிர்த்து வருகிறார். இதனால் அவரை பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ