உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நள்ளிரவில் பைக்-கார் எரிந்த விவகாரம் புகார் வராததால் போலீசார் சந்தேகம்

நள்ளிரவில் பைக்-கார் எரிந்த விவகாரம் புகார் வராததால் போலீசார் சந்தேகம்

ஈரோடு, ஈரோட்டில் நள்ளிரவில் பைக்-கார் எரிந்த விவகாரத்தில், யாரும் புகார் அளிக்க முன்வராதது, போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை எதிரே, நேற்று முன் தினம் நள்ளிரவு சாக்கடையில் பைக்கும், மகேந்திரா காரும் எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில் யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. இதுவரை மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பைக், கார் உரிமையாளர் விபத்து குறித்து புகார் ஏதும் செய்யவில்லை. இதனால் கார், பைக் உரிமையாளர் குறித்த மர்மம் நீடிக்கிறது. போலீசாருக்கும் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி கருங்கல்பாளையம் போலீசார் கூறியதாவது:மகேந்திரா கார் பதிவெண் திருநெல்வேலியை காட்டியது. விசாரித்தபோது திருநெல்வேலியை சேர்ந்த டாக்டர் ஒருவர் காரை பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன் ஈரோட்டை சேர்ந்த மதன் என்பவருக்கு விற்றுள்ளார். மதன் ஈரோட்டில் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. எரிந்த பைக்கின் பதிவெண் தெரியவில்லை. எனவே இன்ஜின் எண், சேசிஸ் எண் கொண்டு கண்டறிய முயற்சிக்கப்பட்டது. ஆனால் பைக் முற்றிலுமாக எரிந்ததால் இன்ஜின் எண், சேசிஸ் எண் எடுக்க முடியவில்லை. சாலையோரம் நின்றிருந்த பைக்கா அல்லது யாரேனும் ஓட்டி சென்றனரா என்ற விபரம் தெரியவில்லை. சாலை விபத்து தொடர்பாக மருத்துவமனைகளில் இருந்தும் எந்த தகவல் குறிப்பும் இதுவரை வரவில்லை. ௩ கி.மீ., துாரத்துக்கு பைக்கை கார் இழுத்து கொண்டு சாலையில் தேய்ந்தவாறு சென்றுள்ளது. இதில்தான் தீப்பொறி கிளம்பி பைக் பெட்ரோல் டேங்க்கில் தீப்பிடித்து பைக், கார் எரிந்துள்ளது. இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். தீ விபத்து குறித்து கார், பைக் உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க முன்வராதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. கார் அல்லது பைக் உரிமையாளர் சிக்கினால் மட்டுமே நடந்தது குறித்து தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை