உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொடங்கியது மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் தாமே முன்வந்து பதிவேற்ற அறிவுரை

தொடங்கியது மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் தாமே முன்வந்து பதிவேற்ற அறிவுரை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை டிஜிட்டல் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. ஈரோடு குமரன் சாலை, கலெக்டர் முகாம் அலுவலகத்தில், மக்கள் தொகை டிஜிட்டல் கணக்கெடுப்பு பணியை, https://se.census.gov.inஎன்ற இணைய தளம் மூலம் தனது சுய விபரங்களை பதிவிட்டு பணியை துவக்கி வைத்து, கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 வரும் ஆக., 1 முதல் வீடுகள் தோறும் சென்று நடக்க உள்ளது. பணியை எளிமையாக்க அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தாங்களாக முன்வந்து சுயமாக பதிவு செய்யும் வாய்ப்பு, 17ம் தேதி முதல், 31 வரை, 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். எனது மொபைல் போன் மூலம் எனது விபரத்தை பதிவு செய்துள்ளேன். அனைத்து குடும்பதாரர்களும், 31க்குள் தங்கள் சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.இக்கணக்கெடுப்பில் உள்ளே நுழைந்ததும், எந்த மாநிலம் என பதிவிட்டு, 'கேப்சா'வை பதிவிட்டதும், உங்கள் வீட்டுக்கான லொகேஷன் தேர்வு செய்து, குடும்பத்தலைவர் பெயரை பதிவிட்டு நமக்கு கிடைக்கும் 'ஓ.டி.பி.,யை' பதிவிட்டு, 33 கேள்விகளை பூர்த்தி செய்ய வேண்டும். குடும்ப விபரங்கள் பற்றிய கேள்வியாக உள்ளதால், வீடு, சுவர் விபரம், மொபட், கார் என, 33 கேள்விக்கும் சரியான விடையை பதிவிட்டு, மீண்டும் சரி செய்து, 'என்டர்' வழங்கினால், நமக்கு ஒரு 'ஐ.டி.,' வழங்கப்படும். ஆக.,1ல் நமது வீட்டுக்கு கணக்கெடுப்பாளர் வரும்போது, அவர்களே விபரத்தை சரிபார்த்து 'அப்ரூவ்' செய்ததும் பணி முடியும். இது முதற்கட்ட பணியாகும். மீண்டும், 2027 பிப்., மாதம் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை மீண்டும் பதிவிட்டு உறுதி செய்வார்கள். இப்பணியில், 3,371 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.இதேபோல் ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு பணியை, ஆணையர் அர்பித் ஜெயின் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ