உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அஞ்சல் தலை கண்காட்சி போட்டி துவக்கம்

அஞ்சல் தலை கண்காட்சி போட்டி துவக்கம்

ஈரோடு: ஈரோடு, பெருந்துறை சாலை, ஆலயமணி மஹாலில் அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான அஞ்சல் தலை கண்காட்சியான, 'ஈரோபெக்ஸ் 2026' - அஞ்சல் தலைகளின் திருவிழா நடந்தது. ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் வரவேற்றார்.கண்காட்சியை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். அரிய, அழகிய அஞ்சல் தலை சேகரிப்பு, மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்களின் திறனை ஊக்கப்படுத்த கடிதம் எழுதும் போட்டி, ஓவிய போட்டி இறுதி சுற்று நடந்தது. குழந்தைகளின் அறிவாற்றல், படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில், '3டீ' காட்சிகள், நடமாடும் கோளரங்கம், பொழுது போக்கு அம்சங்களும் இடம் பெற்றன.ஈரோடு மாவட்ட தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், பண்ணாரி அம்மன் கோவில், ஈரோடு மஞ்சள், ஈரோபெக்ஸ் 2026, காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் உறைகள், காளிங்கராயன் அணைக்கட்டு, ஈரோடு ஜெம்ஸ் தொடர்பான பட அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டன.இரண்டாவது நாளாக இன்று, வினாடி வினா போட்டியின் இறுதி சுற்று, '3டீ' காட்சி, நடமாடும் கோளரங்கம், பொழுது போக்கு நிகழ்ச்சி நடக்க உள்ளது. கோவை மண்டல அலுவலக உதவி இயக்குனர் ஜெயகீதா, கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன், பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் நந்தகுமார், ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !