உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மாணவியருக்கு பரிசு வழங்கல்

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு மாணவியருக்கு பரிசு வழங்கல்

குளித்தலை :குளித்தலை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நல்லாசிரியர் விருது பெற்ற மறைந்த தலைமையாசிரியர்கள் ஆனந்த பத்ம நாபன், வெள்ளைமுத்து நினைவாக, ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பத்மாவதி தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன், மாயனுார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் கடவூர் மணிமாறன் ஆகியோர், தலைமை ஆசிரியர்களின் பணிகளை நினைவுப்படுத்தி பேசினர். மாநில தணிக்கை அலுவலர் அறிவுகண்ணன், முதுகலை ஆசிரியர் மீனா ஆகியோரும் பேசினர்.விழாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் 10 மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கும். பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவியருக்கும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த, 35 ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் ஆசிரியர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வெள்ளை முத்து அறக்கட்டளை அமைப்பாளர் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி