உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி

கோதுமை குளவி கொட்டி பூசாரி பலி

ஈரோடு, ஈரோடு அடுத்த, ஈஞ்சம்பள்ள கீரமடை விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணபதி, 80. சின்ன தாராபுரம் பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். வாரந்தோறும் செவ்வாய் கிழமை கோவிலுக்கு சென்று பூஜை செய்வார். நேற்று முன்தினம் வீட்டை ஒட்டிய தோட்டத்தில் இருந்தபோது, அவரை கோதுமை குளவி கொட்டியது. இதில் மயக்கமாகி சுய நினைவை இழந்தார். உடனடியாக மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை