மேலும் செய்திகள்
மதுவில் விஷம் கலந்து குடித்தவர் உயிரிழப்பு
09-Jul-2025
பவானி,சித்தோடு அருகே இந்திரா நகர், அன்பு இல்லத்தை சேர்ந்தவர் குமார், 57; புரோகிதரான இவர், பவானி கூடுதுறை, மங்கலப்படித்துறை உட்பட பல்வேறு பகுதிகளில் மூத்தோர் வழிபாடு, பரிகார வழிபாடு செய்யும் தொழில் செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உண்டு. ஆர்.என்.புதூர், மங்கலப்படித்துறை அருகே நேற்று மது அருந்தியுள்ளார்.இந்நிலையில் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியே சென்ற மக்கள் பார்த்துவிட்டு, சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆய்வில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். அதீத மது போதையால் உயிரிழந்தார அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்தாரா? என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
09-Jul-2025