தனியார் டிரைவரிடம் அடாவடி அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு மோளகவுண்டன்பாளையம் காந்திஜி வீதி, வர்ஷினி டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரவிநாத். இவர் ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவன பஸ் ஈரோடு-தாராபுரம் (வெள்ளகோவில் வழி) இயங்குகிறது. கடந்த, 29ம் தேதி மதியம் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட வேண்டும். பஸ் புறப்படுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னதாக செல்ல வேண்டிய அரசு பஸ் செல்லவில்லை. எங்கள் பஸ்சில் பயணிகளை ஏற்ற அனுமதி மறுத்து, பஸ்சை இயக்க வழியின்றி அரசு பஸ்சை குறுக்கே நிறுத்தினர். இரு தரப்பி-னரும் தகாத வார்த்தைகளை பேசி கொண்டனர். பஸ்சை உரிய நேரத்தில் இயக்காததால் எங்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு மனுவில் தெரிவித்திருந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசா-ரணை நடத்தி, ஈரோடு சென்னிமலை சாலை அரசு போக்குவரத்து கழக போர்மென் கோபால கிருஷ்ணன், 55. அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜ், 62, காங்கேயம் அரசு போக்-குவரத்து கழக டிரைவர் சுரேஷ், 43, டிரைவர் கோவிந்தராஜ், 52, மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்