மேலும் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாம்
17-Jun-2025
ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும், 26 காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஈரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.வேலையளிக்கும், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 8 ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், பட்டய படிப்பு, ஐ.டி.ஐ., - பொறியியல் பட்டம் பெற்றோர், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், டிரைவர்கள் என அனைத்து தரப்பு வேலை தேடுவோரும் பங்கேற்கலாம். வேலை வழங்குவோர், வேலை தேடுவோர் இலவசமாக பங்கேற்கலாம்.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் வங்கி கடனுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது.முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள், வேலை நாடுனரும், https://forms.gle/6bmCATpxShdA8p2a7 என்ற லிங் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.
17-Jun-2025