உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 23ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

23ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.இதன்படி வரும், 23ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்க உள்ளது. பல்வேறு தனியார் துறை வேலையளிப்பவர்கள் பங்கேற்று, தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள், பட்டதாரிகள், செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குவோர், ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். கூடுதல் விபரத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை