உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடியிருப்பு பகுதியில் ரசாயன குடோன் பெருந்துறையில் எதிர்ப்பு

குடியிருப்பு பகுதியில் ரசாயன குடோன் பெருந்துறையில் எதிர்ப்பு

ஈரோடு, பெருந்துறையில், பவானி சாலை பெரியார் நகர் மற்றும் நாராயணா லே - அவுட் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:எங்கள் பகுதியில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். பெரியார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர், தனியார் சாய தொழிற்சாலைக்கான ரசாயன சேமிப்பு கிடங்கு அமைக்க, அவரது இடத்தை வாடகைக்கு வழங்கி உள்ளார். அங்கு சாய தொழிற்சாலைக்கான மொத்த ரசாயன சேமிப்பு குடோன் அமைந்தால், நிலத்தடி நீர், காற்று மாசுபடும். சுவாச பிரச்னை ஏற்படும். தொற்று நோய்கள் வரும். நிலத்தின் வகைப்பாடும் மாறும். குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற குடோன்களை அனுமதிக்க கூடாது. அதற்கான பணிகளை நிறுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ