உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் ஆணையரை கண்டித்து பேரணி

தேர்தல் ஆணையரை கண்டித்து பேரணி

ஈரோடு:ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன பேரணி நடத்தினர். எஸ்.ஐ.ஆர்., பெயரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 13.70 கோடி வாக்காளர்களை நீக்கம் செய்துள்ளார். இதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பிட்ட சமூகத்தினரை வாக்காளர் என்ற அடிப்படை ஜனநாயக உரிமையை பறித்துள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினர். எஸ்.எப்.ஐ., மாவட்ட செயலர் நவீன், டைபி மாவட்ட செயலர் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். மீனாட்சிசுந்தரம் சாலை வழியாக சென்ற பேரணி, தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ