தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம், தாராபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 49; தாராபுரம் அரசு போக்குவரத்து கழக அரசு பஸ் டிரைவர். திருப்பூரில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு, 12:30 மணியளவில் பஸ்சை ஓட்டி சென்றார். மதுரை பணிமனை துணை மேலாளர் மாரிமுத்து, கணேசனை தகாத வார்த்தை பேசி காலணியால் தாக்கினார். இது தொடர்பான வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை கண்டித்து, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில், கட்சி வேறுபாடின்றி, பல்வேறு சங்கங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு ஆளான கணேசன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.