உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புற வழிச்சாலை திட்டம் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புற வழிச்சாலை திட்டம் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம், கோவை-சத்தியமங்கலம் வரை புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாய நிலம், வீடுகள், வீட்டுமனை இடங்களை விவசாயிகள் மற்றும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே இந்த திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே இருக்கும் சாலையையே அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சத்தி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சத்தி சுற்று வட்டாரத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை