உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரும்பு ஆலை கட்டுமான பணியை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

இரும்பு ஆலை கட்டுமான பணியை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்

தாராபுரம் தாராபுரம் அருகே விவசாயத்தை பாதிக்கும் இரும்பு ஆலையை மூடக்கோரி, ஐந்து கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாராபுரத்தை அடுத்த வடுகபாளையத்தில், கவுரி ஸ்டீல்ஸ் தனியார் இரும்பு ஆலை கட்டுமான பணி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் இந்த ஆலையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் கட்டுமான பணி நடப்பதால் ஆத்திரமடைந்த, சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மக்கள், இச்சிபட்டியில் நேற்று காலை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிடுவதாக அதிகாரிகள் கூறினார். இதையடுத்து காலை, ௧௦:௦௦ மணிக்கு தொடங்கிய போராட்டம், மாலை, ௪:௦௦ மணிக்கு முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
ஜூலை 04, 2025 05:14

மாபியா இப்போதே கட்டுபடுத்தபட வேண்டும். இல்லையேல் விரைவில் தமிழகம் முழுவதும் பரவும் அபாயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை