உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்

கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி போராட்டம்

டி.என்.பாளையம், கொடிவேரி அணை அருகே ஒட்டர்பாளையம் கிராமத்தில் சஞ்சீவி பெருமாள் மற்றும் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இவற்றில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இது தொடர்பாக கோபி தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் விழா நடத்த அனுமதி கோரி, ஒரு தரப்பினர் அலங்கார மாரியம்மன் கோவில் முன், ௩௦க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர். பங்களாபுதுார் இன்ஸ்பெக்டர் முரளிதரன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 12:௦௦ மணியளவில் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி