உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.டி., சான்றிதழ் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.டி., சான்றிதழ் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் :சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலை, பர்கூர் மலையில், 6,௦௦௦ குடும்பத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கு இதுவரை, மலையாளி இன சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள், பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. இதனால் தொடக்கல்வி முதல் உயர் கல்வி வரை படிக்கும் மாணவர்களுக்கு சலுகை பெற முடியவில்லை. விவசாய துறையில் வழங்கப்படும் அரசு சலுகை, மானியமும் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் எஸ்.டி., சாதி சான்றிதழ் கேட்டு, மலைவாழ் எஸ்.டி., மலையாளி மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் சின்ராஜ் தலைமையில், கடம்பூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பள்ளி குழந்தைகளுடன் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ