தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, டிச. 12-ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார்.கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் சண்முகவேல், சண்முக சுந்தரம் உட்பட பலர் பேசினர்.மத்திய அரசு, வாடகை கட்டடங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பதை திரும்ப பெற வேண்டும். ஜி.எஸ்.டி.,யை பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மட்டுமே வசூலிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். டி-மார்ட், ஜியோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு பொருள் விற்பனையில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் வணிகத்தில் உணவு பொருட்களையும், மருந்து பொருட்களையும் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.தமிழக அரசு, சொத்துக்கள் மீதான வரி ஆண்டுதோறும், 6 சதவீதம் உயர்வு என்பதை திரும்ப பெற வேண்டும். வணிக உரிம கட்டணம் மற்றும் தொழில் வரி போன்றவற்றின் உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிப்பதை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியறுத்தினர். பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.