பணியாளர்களுக்கு சீருடை, இனிப்பு வழங்கல்
காங்கேயம், அதிருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகளை, நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ், கமிஷனர் பால்ராஜ் ஆகியோர் வழங்கினார். இதில் பொது சுகாதாரம் மற்றும் பொதுப்பிரிவில் பணிபுரியும் ஆண், பெண் துாய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் துாய்மை பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட, 32 பேருக்கும், தனியார் ஒப்பந்த பணி நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள் 85 பேர், 46 டெங்கு கொசு தடுப்பு பணியாளர்கள் என மொத்தம், 163 பேருக்கு புதிய சீருடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.